டெல்லி: தொலை தொடர்பு துறையில் இந்தியாவில் விரைவில்  5ஜி சேவை தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருக்கிறார்.

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து நிறுவனங்களுக்கும் 5 ஜி அலைக்கற்றை சேவையை மத்திய அரசு வழங்க இருக்கிறது.

அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சோதனை அடிப்படையில் 5 ஜி அலைக்கற்றை வழங்கப்படும் என்றார். ஆனால் அவர்  பேட்டியில் ஹூவாய் என்ற நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை.

ஹூவாய் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தொலைத்தொடர்பு துறையானது மீண்டும் ஒரு முறை கூறி இதுபற்றி முக்கிய ஆலோனைகள் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் ஒருபுறம் இருக்க இந்தியா இப்போது இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஹூவாயை தடை செய்திருக்கிறது அந்நாட்டு அரசு.