டில்லி

நாடெங்கும் 15 நாட்களுக்கு மேல் தொலைத் தொடர்பு தடை செய்யக்கூடாது என மத்திய தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் போது தொலைத் தொடர்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.  இந்த தடை பல நேரங்களில் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படுகின்றன. இதனால் மக்களின் அத்தியாவசியப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு அடைகின்றன.

 இன்று மத்திய தகவல் துறை அமைச்சகத்தின் தொலைத் தொடர்பு துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில், ”பொது அவசர நிலை மற்றும் பொது பாதுகாப்புக்காக  தற்காலிகமாகத் தொலைத் தொடர்பு தடை செய்யப்படும் போது கீழ்க்கண்ட விதிமுறை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இந்த தடை 15 நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஜம்மு காஷ்மீரில் 5 மாதங்களுக்கு மேல் தொலைத் தொடர்பு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.