தராபாத்

கொரோனா எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத மக்கள்மீது தெலுங்கானா முதல்வர் எரிச்சல் அடைந்துள்ளார்.

கொரோனாவை தடுக்க இரு தினங்களுக்கு முன்பே  ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது, தெலுங்கானா மாநில அரசு.

பலர் இதனைப் பொருட்படுத்துவதாக இல்லை.

இதனால் அந்த மாநில முதல் –அமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கடும் எரிச்சலில் இருக்கிறார்.

‘ ஊரடங்கு உத்தரவைப் பலர் மீறுகிறார்கள். நமது மாநிலத்தில் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஆணையை மீறி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல்,வெளியே வந்தால் அவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை’’ என்று ஆவேசமாகச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

‘’ பொதுமக்கள் தெருவில் நடமாடினால். பெட்ரோல் பங்குகளை மூடி விடுவேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தையும் அழைப்பேன்’’ என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் கொந்தளித்தார்.