தெலுங்கானா தேர்தல் : கவர்ச்சி நடிகையை களம் இறக்கிய பாஜக

தராபாத்

தெலுங்கு திரை உலகின் பிரபல கவர்ச்சி நடிகை ரேஷ்மா ராத்தோர் பாஜக சார்பில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டி இடுகிறார்.

பிரபல தெலுங்கு நடிகையான ரேஷ்மா ராத்தோர் அதாகப்பட்டது மகா ஜனங்களே என்னும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு தமிழை விட தெலுங்குப் படங்களில் அதிக வாய்ப்பு கிட்டியது. தெலுங்கு திரை உலகின் கவர்ச்சிக் குண்டு என புகழ் பெற்றவர் ரேஷ்மா.

ரேஷ்மா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில தினங்களில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கபட்டது. அவருக்கு தெலுங்கானா மாநிலம் வைரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்தது.

படு கவர்ச்சியாக நடித்து வரும் ரேஷ்மா தேர்தலை ஒட்டி பிரத்தியேகமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிடு வருகிறார். அந்தப் புகைபடங்களில் அவர் தெலுங்கானா மாநில பெண்கள் பாணியில் சேலை உடுத்தி உள்ளது போலவும் வணக்கம் சொல்வது போலவும் விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்,