தராபாத்

தெலுங்கானா அரசு இணைய தளத்தில் 43,462 அரசாணைகள் பதிவேற்றம் செய்யாததற்கு விளக்கம் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றm நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கு எனத் தனி இணைய தளம் அமைத்துள்ளது.   அந்த இணைய தளத்தில் அரசாணைகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.    இதன் மூலம் அரசு உத்தரவுகள் குறித்து அந்தந்த மாநில மற்றும் வெளி மாநில மக்கள் அறிந்துக் கொள்ள முடியும்.    ஆனால் தெலுங்கானா மாநில இணைய தளத்தில் பல அரசாணைகள் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதாக ஒரு பொது நல வழக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில்  பதியப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பேரளா சேகர் ராவ் இது குறித்து பொது நல மனு ஒன்றை தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.   அந்த மனுவில் அவர், “தெலுங்கானா அரசால் கடந்த 2014 ஆம் வருடம் ஜூன் 2 ஆம் தேதி முதல் 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 வரை மொத்தம் 1.04 லட்சம் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதில் 43, 462 அரசாணைகள் மாநில இணைய தளத்தில்  பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படாமல் மறைப்பதே ஆகும்.   இவை அனைத்தும் மக்கள் நலனை விட அரசியல் ஆதாயங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் ஆகும்.   குறிப்பாக பல அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகளுக்கு மொபைல் கட்டணம்,  குடிநீர் கட்டணம் ஆகியவற்றை அரசு அளிக்க உள்ள பல அரசாணைகள் இணையத்தில் காணப்படவில்லை.” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வழக்கு மனு தெலுங்கானா உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ராதவேந்திர சிங் சவுகான் மற்றும் அபிஷேக் ரெட்டி ஆகியோரின் அமர்வின் கிழ் விசாரணைக்கு வந்தது.    அமர்வு தெலுங்கானா அரசுக்கு இந்த அரசாணைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாததற்கு விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.  இந்த விளக்கம் அளிக்க நீதிமன்றம்  அரசுக்கு 4 வாரக் கெடு விதித்துள்ளது.,