அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை : துப்பு கொடுத்தால் பரிசு

ன்சாஸ், அமெரிக்கா

மெரிக்க நாட்டின் கன்சாஸ் நகரில் ஒரு உணவகத்தில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டின் மிசோரி பல்கலைக்கழகத்தில் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த சரத் கொப்பு என்னும் 24 வயது இளைஞர் கல்வி பயின்று வருகிறார்.   இவர் கன்சாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

அந்த உணவகத்தில் உள்ளவர்கள் பதரிப் போய் உள்ளனர்.   தகவலறிந்து அங்கு வந்த காவலர்கள் ரத்த வெள்ளத்தில் சரத் கொப்பு கிடப்பதை கண்டுள்ளனர்.     காவலர்கள் உடனடியாக சரத் கொப்புவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.   அங்கு அவர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்சாஸ் நகர காவல்துறையினர் ஒரு சிசிடிவி பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.  மேலும் அந்த சிசிடிவியில் காணப்படும் நபர் சந்தேகத்துக்குரியவர் எனவும் அவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு $10000 பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.