ஐதராபாத்: ரூ.10 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாகவும், கொரோனா காரணமாக மூடப்பட்ட  திரையரங்குகளுக்கு குறைந்தபட்ச மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகவும்  தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ்  அறிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தெலுங்கு திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா உள்பட நடிகர்கள், திரையிலகினர் பல்வேறு கோரிக்கை களை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதை ஏற்று தெலுங்கானா  தற்போது   பல்வேறு சலுகைகளை அறிவித்து  சந்திரசேகரராவ் அறிவித்து  உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்புகள்  தொடஙகி உள்ளது. .ஆனால் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள். இதனால், பெரிய பட்ஜெட் படங்கள் வௌிவருவதில் தயக்கம் நிலவுகிறது.  இதனை கருத்தில் கொண்டு திரைத்துறையை மீட்டெடுக்க தெலங்கானா அரசு, தெலுங்கு திரைப்படத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

சினிமா தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதித்த அவர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் திரைப்படத் துறையின் பிரதிநிதிகள் ஒரு கூட்டுக் கூட்டத்தை கூட்டி தேவையான தரமான இயக்க நடைமுறைகளைத் தவிர்த்து தியேட்டர்களை மீண்டும் திறக்கக்கூடிய சரியான தேதியை இறுதி செய்யுமாறு பரிந்துரைத்தார்.

அதன்படி 10 கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகும் படங்கள் வெளியாகும்போது டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும். ஒற்றை திரை தியேட்டர்கள் உட்பட திரைப்பட தியேட்டர்களுக்கு பல நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கவும்,  டிக்கெட் விலை தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் முடிவெடுக்கவும் தாராளம் காட்டியுள்ளார்.

சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ரூ .10 கோடி வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒன்பது சதவீத மாநில ஜிஎஸ்டியை திருப்பிச் செலுத்துவதாகவும், தற்போதுள்ள நெருக்கடியைத் தடுக்க உதவுவதற்காக ஜூனியர் கலைஞர்கள் உட்பட சுமார் 40,000 திரைப்படத் துறை ஊழியர்களுக்கு ரேஷன் மற்றும் சுகாதார அட்டைகளை வழங்குவதாகவும் ராவ் அறிவித்தார்.

தியேட்டர் காட்சிகளை அதிகரித்தல் சினிமா, தியேட்டர் டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளுதல், ஸ்டூடியோ கட்ட நிலம், மின்சார கட்டணத்தில் சலுகைகள், சினிமா தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டைகள்,  தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்கப்படும், தியேட்டர்கள் தங்களின் விருப்பப்படி காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை உள்பட பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார்.