ஐதராபாத்

வாஸ்துவுக்காக தெலுங்கானா முதல்வர் ரூ. 500 கோடி செலவில் புதிய சட்டப்பேரவையை கட்ட தொடங்கி  உள்ளார்.

ஐதராபாத் நகரில் உசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சரித்திர புகழ் வாய்ந்தது ஆகும். இந்த கட்டிடம் இன்னும் பலமாகவே உள்ளது. எரம் மன்சில் என பெயருள்ள இந்த கட்டிடத்தை காண ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
.
இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது. இது குறித்து ஆராய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு வாஸ்து நிபுணர்கள் குழுவை அமைத்தார். அவர்கள் இந்த கட்டிடத்தை வாஸ்துப்படி சரியாக உள்ளவாறு மாற்றி அமைக்க முடியாது எனவும் இதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.

அதை ஒப்புக்கொண்ட தெலுங்கானா முதல்வ்ர் சந்திரசேகர் ராவ் புதிய கட்டிடம் கட்ட உள்ளார்.  வாஸ்துவுக்கு ஏற்றபடி புதிய கட்டிடம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இந்த பூமி பூஜையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆளும் கட்சி பிரமுக்ர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். இரு கட்டிடங்களாக கட்டப்படும் இந்த புதிய கட்டிடங்கள் அமைக்க ரூ.500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் தலைமை செயலகத்துக்கு ரூ.400 கோடி செலவில் ஒரு கட்டிடமும் சட்டப்பேரவைக்காக ரூ.100 கோடி செலவில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட உள்ளன

இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக சட்டப்பேரவி உறுப்பினர் ராஜா சிங் இதை எதிர்த்து 150 தொண்டர்களுடன் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜா சிங், ”தேவை இல்லாமல் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதை எதிர்த்ததால் என்னை மாநில அரசு கைது செய்துள்ளது. தற்போது நகரில் மோசமான நிலையில் உள்ள ஓஸ்மானியா அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் ஆகியவற்றை இதே செலவில் புனரமைக்கலாம். தெலுங்கானா முதல்வரின் புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டத்தை பாஜக கடுமையாக எதிர்க்கிறது” என தெரிவித்துள்ளர்.

ஐதராபாத் நகரில் பல ஆர்வலர்கள் எரம் மன்சில் கட்டிடத்தை இடிக்கும் அரசின் முடிவை கடுமையா எதிர்த்துள்ளனர். ஒரு புராதன கட்டிடத்தை இடிக்கக்கூடாது என தொடர்ந்து பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் எந்த எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாமல் கட்டிட வேலைகளை தொட்ங்கி உள்ளார்.