தெலுங்கானா தேர்தலில் காங்கிரசின் தொகுதிப் பங்கீடு இறுதிப் பட்டியல்

--

தராபாத்

காங்கிரஸ் கட்சி தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டு இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா சட்டப்பேரவையை அதன் ஆயுட்காலம் முடிவதற்கு ஒரு வருடம் முன்பே அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கலைத்தார். அதை ஒட்டி வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி இம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளன. பதிவான வாக்குகள் டிசம்பர் 11 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உடன் தெலுங்கு தேசம் தெலுங்கானா ஜன சமிதி, சிபிஐ ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி முதல் முதலாக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொகுதிப் பங்கீட்டின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தெலுங்கு தேசம் கட்சிக்கு 14 இடங்கள், தெலுங்கானா ஜன சமிதி கட்சிக்கு 8 இடங்கள் மற்றூம் சிபிஐ க்கு 3 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 93 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தெரிய் வந்துள்ளது.