தெலுங்கானா மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி கடையடைப்பு

 

தராபாத்

தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி அன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.   அரசுப் போக்குவரத்துக் கழகத்தை  அரசுத் துறையாக மாற்ற வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது எனவும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்துக்கு அரசு பணியவில்லை.  முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊழியர்கள் உடனடியாக  பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு திரும்பாவிட்டால் 48500 ஊழியர்களும் தாமாகவே பதவி விலகியதாக அரசு கருஹ்டும் எனத் தெரிவித்துள்ளார்.   ஆயினும் ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது.

அரசு தங்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்துக் கொண்டனர்.  இது போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

நேற்று தெலுங்கனா அரசு 3500 தனியார்  பேருந்துகளை இயக்க முடிவு எடுத்தது;  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் போக்குவரதது ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.