விண்மீனை விழுங்கும் கருந்துளை ! வானில் நடக்கும் அதிசயம்!

4

விண்வெளியில் எண்ணற்ற கருந்துளைகள் வலம் வந்து கொண்டிருப்பதாக்கவும், அவற்றால் சூரியன் உட்பட உள்ள விண்மீன்கள் மற்றும் அவற்றின் கோள்களையும் உள்ளிழுத்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் பலரும் கூறி வருகின்றனர். பூமியின் அழிவுக்கு காரணமாக இருக்கும் ஆபத்துக்களில் ஒன்றாக கருந்துளைகளையும் பட்டியலிட்டுள்ளார் பிரபல இயற்பியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங்க்.

இந்நிலையில், அதிக நிறை கொண்ட கருந்துளை ஒன்று, ஒரு விண்மீனை விழுங்குவதை விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் மூலம் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், கருந்துளைகள் விண்மீன்களை விழுங்கும் போது என்ன நடைபெறுகிறது என்பதையும், ஒளியின் வேகத்தில், எவ்வாறு கருந்துளைகள் துகள்களை உமிழுகின்றன என்பதையும் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

giphy

ஒரு விண்மீனானது கருந்துளைகளுக்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்தால், கருந்துளையானது, அந்த விண்மீனை உறிஞ்சிவிடுகிறது. இவ்வாறு கருந்துளையால் உறிஞ்சப்படும் விண்மீனின் சில எச்சங்கள், அக்கருந்துளையை சுற்றி வட்ட வடிவத்தில் சேருகிறது. பின்னர் அவை, அதிக வெளிச்சத்துடன் துகள்களாக வெளித்தள்ளப்படுகிறது. இவ்வாறு வெளித்தள்ளப்பட்ட இந்த துகள்கள் ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் பயணிக்க துவங்குகிறது.

இது போன்ற துகள்களின் பயணத்தை, வானியலாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு 3.9 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பால்வெளி மண்டலத்தில் முதன் முதலாக கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி