பிரபல தெலுங்கு நடிகரின் வங்கிக் கணக்கு முடக்கம்
பிரபல தெலுங்கு நடிகர், மகேஷ் பாபு வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய `ஸ்பைடர்’ தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், 2007 – 2008ம் ஆண்டுக்கான சேவை வரியை செலுத்தாததால், அவரது இரண்டு வங்கி கணக்குகளை, சரக்கு மற்றும் சேவை வரித்துறை முடக்கியிருக்கிறது.
இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விளம்பரப் படங்களில் நடித்ததற்காக விதிக்கப்பட்ட சேவை வரியான, 18 லட்சம் ரூபாயை, மகேஷ் பாபு செலுத்தவில்லை. இந்த தொகைக்காக, அவரது ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில், 75 லட்சம் ரூபாய் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.