ஐதராபாத்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர், நடிகைகள் உள்பட முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நிதி உதவிகளை அரசுக்கு செய்து வருகிறது. இந்த வரிசையில் பாகுபலி புகழ் நடிகர் பிரகாஸ் ரூ.4 கோடி நிதி கொடுத்துள்ளார். மேலும் பல நட்சத்திரங்களும் தாராளமாக நிதிஉதவி செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமகா சினிமா தொழில் உள்பட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. இதையடுத்து அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பல  தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் அரசுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.

அதன்படி, நடிகர் பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் , நடிகர் மகேஷ் பாபு 1 கோடி ருபாய், மேலும் மற்ற சினிமா நட்சத்திரங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரகாஷ்  வீட்டில் தன்னை இரண்டு வாரங்களுக்கு தனிமை படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.