தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் மூன்று படங்களின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்..

’’டோலிவுட்’’ என்ற குறுகிய வட்டத்தில் சுழன்ற பிரபாசை எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘’பாகுபலி’ படங்கள் இந்திய அளவில் உயர்த்தியது.
பிரபாஸ் இப்போது நடிக்கும் மூன்று தெலுங்கு படங்கள் , பல்வேறு கட்டங்களில் உள்ளன.


இந்த மூன்று படங்களின் மொத்த பட்ஜெட், ஆயிரம் கோடி ரூபாய் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே ஜோடியாக பிரபாஸ் நடித்து வரும் வரலாற்றுப்படமான ‘’ராதே ஷியாம்’’ 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.
இதில் விக்ரமாதித்யா என்ற கைரேகை ஜோதிடர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
புராணப்படமான ‘’ஆதிபுருஷ்’’ படத்தின் பட்ஜெட் 450 கோடி ரூபாய். இன்னும் இரு ஆண்டுகள் கழித்து இந்தப்படம் வெளிவரும்.
இது தவிர, ’மகாநதி’ பட இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கும் ‘சயின்ஸ் பிக்‌ஷன்’ கதையில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் பட்ஜெட், 300 கோடி ரூபாய்.
இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது.
இந்த மூன்று படங்களை முடித்து விட்டு கொரட்டலா சிவா, டைரக்ட் செய்யும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், பிரபாஸ்.

-பா.பாரதி.