பிலிம்பேர் விருதை மக்கள் நலனுக்காக ஏலம் விடப்போகும் நடிகர்

 

தராபாத்

னக்கு கிடைத்த பிலிம்பேர் விருதை முதலமைச்சர் நிதிக்காக ஏலம் விடப் போவதாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.

திரையுலக பிரமுகர்களுக்கு பிலிம்பேர் விருது பெறுவது வாழ்நாள் லட்சியம் ஆகும்.    இந்த விருது ரசிகர்களின் வாக்கை வைத்து தீர்மானிக்கப் படுவதால் ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞரும் தங்களுக்கு ரசிகர்களிடையே உள்ள ஆதரவைப் பற்றி தெளிவாக அறிய முடிகிறது.   தென் இந்திய மொழிகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது.

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில்

தெலுங்கு திரை உலகில் கடந்த வருடம் மிகவும் புகழ்பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி.   இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா  ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார்.   தற்போது தெலுங்கு பட ரசிகர்களில் இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் இவர் ஒரு ஆதர்ச நாயகனாக இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தமைக்கு பிலிம்பேர் விருதுகிடைத்துள்ளது.   இவர் ஐதராபாத்தை சேர்ந்தவர்.   அவர் தனது சொந்த ஊரை முன்னேற்ற விரும்புவதால் இந்த விருதை ஏலம் விட உத்தேசித்துள்ளார்.   அந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப் போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவுகளில்  ஏற்கனவே ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று விட்டதால் இந்த விருது தனக்கு ஒரு போனஸ் போன்றது என தெரிவித்துள்ளார்.   நடிப்புத் துறையில் தனக்கு கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு தனது பெற்றோருக்கு வீடு வாங்கித் தர முடியும் எனவும் ஆனால் சமூகத்துக்கு தாம் ஏதாவது செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

You may have missed