நடிகை ஸ்ரீ ரெட்டி மீது தெலுங்கு நகைச்சுவை நடிகை கராத்தே கல்யாணி,வழக்கு பதிவு…!

நடிகை ஸ்ரீ ரெட்டி மீது தெலுங்கு நகைச்சுவை நடிகை கராத்தே கல்யாணி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி, தன்னைப் பேஸ்புக் லைவ் மூலம் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக சில வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நடிகை ஸ்ரீ ரெட்டியுடன் காஸ்டிங் கோச் நிகழ்வு குறித்த விவாதத்தில் கல்யாணி பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கல்யாணி தெரிவித்த கருத்துக்களை மறுத்ததோடு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அவரை அவமதித்து பேசியுள்ளார். இதன் காரணமாக கல்யாணி ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.