தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற ‘மனம்’ தமிழில் ரீமேக்காகிறதா….?

--

2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ’24’.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது இப்படம் .

இந்நிலையில் “’24’ 2-ம் பாகம் உருவாகுமா?” எனும் கேள்விக்கு இயக்குநர் விக்ரம் குமார்

’24’ 2-ம் பாகத்துக்காக நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான பணிகள் போய்க் கொண்டிருக்கின்றன.

கதை முடிவானவுடன், சூர்யா சாருக்குப் பிடித்திருந்தது என்றால் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டியதுதான் என கூறியிருந்தார் .

இதனிடையில் இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை சந்தித்தது இதற்கு தான் என செய்தி பரவியது . அதற்கு விளக்கமளித்துள்ளார் விக்ரம் குமார் .

சூர்யா சாருக்கு ‘மனம்’ படத்தை தமிழில் பண்ண வேண்டும் என்ற ஆசையிருந்தது. சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஜோதிகா ஆகியோரை வைத்து ‘மனம்’ பண்ண முடியும். அதற்காக அவரைச் சந்தித்தேன்.

அப்போது என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதைச் சொல்கிறேன். அது பிடிக்கவில்லை என்றால் ‘மனம்’ பண்ணலாம் என்றேன். ’24’ கதையைச் சொன்னேன். அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், உடனே பண்ணினோம்”.

இவ்வாறு விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.