ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாநில அரசு மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் தெலுங்கு பாடம் கட்டாய கற்பித்தல் செய்யும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கான மாநிலத்தில்,  தற்போது மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம் என்று வாய்மொழி உத்தரவு காரணமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல்,  தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் மற்றும்  சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 1வது வகுப்பு முதல் மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும்  தெலுங்கு மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ளும் வகையில் சட்டதிருத்த மசோதா கொண்டு வர மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவின் பேரில் மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த மசோதாவை மத்திய  சட்டத்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சட்டதிருத்தத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், வரும் கல்வி ஆண்டு முதல் அனைவரும் தெலுங்க படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஏற்னவே கடந்த ஆண்டு   டிசம்பர் மாதம்  நடைபெற்ற உலக தெலுங்கு மாநாட்டில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ்,  அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்படும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.