சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி…!

கொரோனா வைரஸின் பரவலைக் தடுக்க, 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள்.

அந்த வகையில் உகாதி பண்டிகையின்போதுதான் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ட்விட்டர் தளத்தில் இணைந்தார்.

“கரோனா ஊரடங்கால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். நிறையப் படங்களும் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து எழுத இந்த நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனது சுயசரிதையை ஒலி வடிவிலும், புத்தக வடிவிலும் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார் .