நகையை ஏலம் விட்டு விவசாயிகள் நிதி அளித்த முன்னாள் எம், எல். ஏ.

 

ங்காரெட்டி, ஆந்திரா.

னக்கு பரிசாக கிடைத்த தங்க பிரேஸ்லெட்டை ஏலத்தில் விற்று தெலுங்கானா விவசாயிகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  முன்னாள் எம். எல். ஏ ஜெயப்ரகாஷ் ரெட்டி அளித்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிகவும் அதிகம்.   மிளகாய்களுக்கு சரியான விலை கிடைக்காததால் நஷ்டமுற்று விவசாயிகள் தற்போது வருத்தம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் சங்காரெட்டியில் ஒரு காங்கிரஸ் மீட்டிங்க் நடைபெற்றது.  அதை முன்னின்று நடத்தியவர் அந்த தொதியின் முன்னாள் எம். எல். ஏ/ ஜக்கா ரெட்டி எனப்படும் ஜெயப்பிரகாஷ் ரெட்டி.  அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துக் கொண்டார்.   எக்கச்சக்கமான கூட்டம் கூடியதைக் கண்டு ராகுல் மகிழ்ந்தார்.

தனது பக்கத்தில் அமர்ந்திருந்த முன்னாள் எம். பி. அனுமந்த ராவிடம்,  இத்தனை கூட்டம் கூட்டிய ரெட்டியை மிகவும் புகழ்ந்தார்.    அதை கேட்டு மகிழ்ந்த ராவ், தனக்கு ரெட்டிக்கு பரிசளிக்க விருப்பம் என்றும், ஆனால் தற்போது தான் அணிந்திருக்கும் தங்க பிரெஸ்லெட் தவிர வேறொன்றும் இல்லை எனவும் தெரிவித்தார்.  ராகுல் அவரிடம், அதையும் பரிசாக அளிக்கலாமே என்று  விளையாட்டாக கூறினார்.

அடுத்த தினம் பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் அனுமந்த ராவ், நடந்ததைக் கூறி, தனக்கு சோனியா மற்றும் ராகுல் கூறியதே வேதவாக்கு எனவும்,  அதை மீறி நடக்க தான் என்றுமே தயாராக இல்லை எனவும் கூறி  அந்த ப்ரேஸ்லெட்டை ஜெக்கா ரெட்டிக்கு பரிசாக அளித்தார்.

அந்த பிரேஸ்லெட்டியின் எடை 5 தோலாக்கள்.  கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ளது  ஜெக்கா ரெட்டி, அதனை தாம் வைத்துக் கொள்ளாமல் விவசாயிகள் நல நிதிக்காக ஏலம் விட்டார்.  அதனை மகேந்தர் ரெட்டி என்பவர் ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கினார்.  கிடைத்த பணத்தை விவசாயிகள் நல நிதிக்கு ஜெக்கா ரெட்டி அளித்து விட்டார்

ராகுலின் விளையாட்டுப் பேச்சு விபரீதமாகாமல், விவசாயிகளுக்கு நலன் அளித்தது சங்காரெட்டி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.