புதுடெல்லி: நாட்டின் சராசரி வெப்பநிலை, இந்த 21ம் நுாற்றாண்டின் இறுதியில், 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து, புனேவிலிருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆராய்ச்சி மையம், ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

இதை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெளியிடுகிறார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் சராசரி வெப்பநிலை, புவி வெப்பமயமாதல் காரணமாக, 1901-2018ம் ஆண்டில் 0.7 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது.

இதனால், 21ம் நுாற்றாண்டின் முடிவில், நாட்டின் சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.