பராசர மகரிஷிக்கு கோவில்!

பராசர மகரிஷிக்கு கோவில்!

பராசர்.

மாண்டியா மாவட்டம்.  இமாசலபிரதேசம்.

பராசர் ஜோகிந்தநகர் ரயில் நிலையத்தில் இருந்து 88கிமீ.  மாண்டியிலிருந்து 50 கிமீ.

பராசர் கடல் மட்டத்தில் இருந்து 2730 மீ.உயரத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ளது.14 ம் நூற்றாண்டில் Ban Sen என்ற அரசர் பராசர மகரிஷி க்கு deodar மரத்தில் பகோடா பாணியில் கோவில் கட்டினார்.

பராசரர் சிலை ஒரு கல் வடிவில் உள்ளது.

இங்கு உள்ள பராசர் ஏரி மிகவும் விஷேசமானது.பீமனால் உருவாக்கப்பட்டது என்று ஐதீகம்.
பராசர மகரிஷி 12 ஆண்டுகள் இந்த ஏரியின் கரையில் தவம் செய்துள்ளார்.300மீ சுற்றளவு உள்ள மிதக்கும் தீவைக் கொண்ட அழகான ஏரி. தௌலாதார் பனிச் சிகரங்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் பெறும் ஆன்மீக அதிர்வலைகளை அனுபவிக்கவும் ஏரியின் இயற்கை அழகை ரசிக்கவும் வரும் பக்தர்கள் ஏராளம்.

பராசர மகரிஷி வசிஷ்டரின்  பேரன். சக்தி ரிஷியின் புத்திரர்.

தன் தாயின் வயிற்றில் 12 வருடங்கள் கர்ப்பத்திலிருந்தபோதே வேத சாஸ்திரங்கள் ஓதியவர்.
பராசர மகரிஷி தந்த பொக்கிஷம்

விஷ்ணு புராணம்.வேதத்தின் சாரத்தை நமக்கு அளிக்கும் புராண நூலாக இது உள்ளது.