Random image

சென்னை : போக்சோ சட்டத்தில் கைதான கோவில் பூசாரி

சென்னை

சென்னையில் உள்ள மண்ணடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மண்ணடியில் பவழக்கார தெரு அருகே ஒரு 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்த்து வருகிறார்.  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்புபடித்து வருகிறார்.   அங்கு கங்கையம்மன் கோவில் என ஒரு கோவில் உள்ளது.   இந்தக் கோவிலுக்கு அடிக்கடி சிறுமி சென்று வழிபடுவார்.

கங்கையம்மன் கோவிலில் 62 வயதான நடராஜ் என்பவர் பூசாரியாக பணி புரிகிறார்.    சிறுமி நடராஜுக்கு பூஜை உதவி செய்வது வழக்கம்.  அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமிக்கு ஆசை காட்டிய நடராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.     இந்த தொந்தரவு தினமும் தொடர்ந்ததால் அந்தச் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் அந்த சிறுமியின் தாய் சென்னை துறைமுகம் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகார் அடிப்படையில் நடராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறியினர் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.