அமைச்சரை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அர்ச்சகர் நீக்கம்

கேரளாவின் தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அர்ச்சகர் ஒருவர் பணிநீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் மலபார் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்டது கஞ்சன்காடு பகுதியில் உள்ள மதியன் கூலம் சேத்திர பாலகா கோயில். இக்கோவிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் டி மாதவன் நம்பூதிரி.

கடந்த நவம்பர் 18ம் தேதி கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்றபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு டி அர்ச்சகர் மாதவன் நம்பூதிரி கடுமையான கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவிட்டார். மேலும்,  கேரளாவின் தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனையும் அந்த பதிவில் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது பதிவை பலரும் பகிர்ந்தனர். அது விவாதப்பொருளானது. இதையடுத்து பயந்துபோன அர்ச்சகர் மாதவன் நம்பூதிரி, தனது பதிவை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் மாதவன் நம்பூதிரியை பணியிடைநீக்கம் செய்ய தேவஸ்தான வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான உத்தரவு கடிதத்தை கோயில் நிர்வாக அதிகாரி விஜயன் அளித்தார் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாலக சேத்திர கோயிலின் பரம்பரை அர்ச்சகரான தன்னை நீக்க முடியாது என மாதவன் நம்பூரிதி தெரிவித்துள்ளார்.

#temple #priest #suspended #fb #against #kerala #minister