Random image

கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணி ஆற்றுவதிலை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை

கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணி ஆற்றாமல் இயந்திரத்தனமாகி உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக கோவிலில் சிலை திருடுவது அதிகரித்து வருவதாக புகார்கள் தெரிவிக்கின்றன.   இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு சிலை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.   புன்னைவன நாதர் சன்னிதியில் வாயில் பூவுடன் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலைஒன்று இருந்தது.    அதை மாற்றி பாம்பு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.   அப்போது நீதிமன்றம், “கோவிலில் சிலை மாறியது குறித்து அரசுக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டியது அர்ச்சகர்களின் கடமை ஆகும்.   ஆனால் அர்ச்சகர்கள் தற்போது.தெய்வீகமாக பணி ஆற்றுவதில்லை.  வெறும் இயந்திரத் தனமாக பணி புரிகின்றனர்” என தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது தமிழ்நாடு அறநிலையத்துறை அவகாசம் கோரியது.   அதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை இன்னும் 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.