அதிபர் டிரம்ப்-ஐ வரவேற்க அமைக்கப்பட்ட அலங்கார வளைவு இடிந்து விழுந்தது……

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்கு ஒரு நாள் முன்னதாக, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தில் கட்டப்பட்ட தற்காலிக வாயில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இறுதி நிலையில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பிப்ரவரி 24 ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் இருவரும் கூட்டாக உரையாற்ற உள்ளனர்.

கீழே உள்ள இந்த வீடியோவை பார்க்கும்போது, காற்றை கூட தாங்க முடியாத வகையில் தரமற்ற தாற்காலிகமாக அலங்கார வளைவு அமைக்க பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட எண்ணிலடங்கா அலங்கார வளைவுகளில் இதுவும் ஒன்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டேரா ஸ்டேடியம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய திறன் உள்ளது. இது பழைய அரங்கத்தை இடித்த பின்னர் மீண்டும் கட்டப்பட்டது. இந்தியாவில், மோட்டேரா ஸ்டேடியத்தை விட ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் மட்டுமே அதிக போட்டிகளை நடத்தியது. மைதானம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு திறந்து விடப்பட்டது.

 

இதற்கிடையே, அகமதாபாத் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. வான் வழி ரோந்து, ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.