கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் தற்காலிக மீன்கடைகள்

--

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையிலும் போராட்டம் நடந்தது.

அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சென்னை மெரினா அருகே  கடந்த 23-ம் தேதித வன்முறை ஏற்பட்டது. இதில் நடுக்குப்பம் பகுதியில் இருந்த மீன் சந்தைக்கு தீ வைக்கப்பட்டது.  இதனால் அங்கு வசிக்கும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

இந்த நிலையில், அங்கு தற்காலிகமாக 120 மீன் கடைகள் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. நிரந்தர கடைகளுக்கான பணிகளும் நடக்கின்றன. அவை முடியும் வரை இந்த கடைகள் செயல்படும் என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.