சென்னை:

கொரோனா தடுப்பு பணிக்காக தனியார் நிறுவனம் சார்பில் தற்காலிக பணியாளர்களின் நியமனத் தில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை உழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு அறிவித்தது.

ஆனால், அதற்கான பணியை நியமனத்தை தனியார் நிறுவனத்துக்கு தமிழகஅரசு வழங்கியது. அந்நிறுவனம் பணி வேண்டுவோரிடம், பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.  மேலும் ஒரு மாத சம்பளத்தை கமிஷனாக கேட்பதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் குற்றச்சாட்டியது. மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள்,  மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில்,  தனியார் நிறுவனம் சார்பிலான சுகாதாரத்துறை ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.