ம்ம நண்பன் ஒருத்தன்…  பெரிய செய்தி நிறுவனத்துல வேலை பார்க்கிறான். இன்னைக்கு போன் போட்டான்..

“அடேய்.. ரவுண்ட்ஸ்..  அந்தக்கால அவசர தொலைத்தொடர்பு சாதனம் பெயர் தெரியுமா…”

“தெரியும்… அது வந்து..”

“சரி சரி.. தெரிஞ்சுதுனா ஓகே. அந்த பெயர் கொண்ட ஊடகத்துல எல்லாரையும் கேள்வி கேக்கிற திருவரங்க கடவுள் கொண்டவர் இருக்கார் தெரியுமா…”

“அட…  அதான் தெரியுமே.. மூனு இனிசியல் அரசியல்வாதிகிட்ட லஞ்சம் வாங்கியதால, அவரை நிர்வாகம் சஸ்பெண்ட் பண்ணியிருக்கு.. அதானே… பேஸ்புக்ல இதான ஓடுது!“

“அது தெரியும்.. எவ்வளவு வாங்குனாருன்னு தெரியுமா..”

“அது தெரியாதே.. சொல்லு சொல்லு..”

“பத்து லட்ச ரூபாய்”

“இவ்வளவுதானா..  இவ்வளவு குறைச்சலா வாங்கினதாலதான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களோ…”

“அது இருக்கட்டும்.. இப்போ அரசியல் கட்சி பிரமுகருங் எல்லாம் பேஸ்புக்க அந்த நபரை திட்டிகிட்டிருக்காங்க.. நேர்மை இல்லாத ஆளுன்னு..”

“அரசியல் கட்சி பிரமுகர்களா.. அது யாரு..”

“அட.. பேஸ்புக்ல எழுதற எல்லோரும் அப்படித்தானே தன்னை நினைச்சுக்கிறாங்க..”

“ஹிஹி.. அது சரிதான். ஆனா அவங்கவங்க கட்சித் தலைவருங்க கோடி கோடியா லஞ்சம் வாங்கற நேரத்துல..  இந்த ஊடகக்காரரு வெறும் பத்து லட்சம் வாங்கினது தப்புதான் போல..”

“ஹாஹா…  உங்கிட்ட பேசி சமாளிக்க முடியாது.. வையி போனை..”