சென்னை: தமிழ்நாட்டுத் தலைநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தின் உயர்த்தப்பட்ட பகுதி பணிகளுக்கான டெண்டர்களை சமர்ப்பித்துள்ளன 3 கட்டுமான நிறுவனங்கள்.
சென்னை மெட்ரோ திட்டத்தின் புதிய பாதையான 26.09 கி.மீ. நீளமுள்ள(லைன் -4) கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பாதையின் முதல் கட்டமான 7.955 கி.மீ. நீளமுள்ள உயர்த்தப்பட்ட பிரிவு மற்றும் 47 கி.மீ. நீளமுள்ள மாதவரம் – சோலிங்கநல்லூர் பாதையின்(லைன்-5) பிரிவு ஆகியவற்றுக்கான டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
லைன் 4இன் பிரிவில், ஆற்காடு சாலையில், பவர் ஹவுசிலிருந்து போரூர் சந்திப்பு வரை மொத்தம் 9 நிலையங்கள் அடக்கம்.
சென்னை மெட்ரோ இரண்டாம் பகுதி திட்டத்திற்கு(118.9 கி.மீ நீளம்) டெண்டர்களைக் கோரியிருந்தது சிஎம்ஆர்எல். இதன் மதிப்பு ரூ.800 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பணியை 1080 நாட்களுக்குள் (2.95 ஆண்டுகள்) முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது டெண்டர் சமர்ப்பித்துள்ள நிறுவனங்கள்
* இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட்
* லார்சென் & டப்ரோ லிமிடெட்(எல் & டி)
* என்சிசி லிமிடெட்