தனது மரண தண்டனையை தானே முடிவு செய்த குற்றவாளி!

டென்னிசி:

மெரிக்க குற்றவாளி ஒருவர் தனது மரண தண்டனையை தனது விருப்பப்படி நிறைவேற்ற கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரது விருப்பப்படியே தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மனலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக டென்னிசி மாகானத்தை சேர்ந்த டேவிட் மில்லர் என்பவருக்கு கடந்த 1981ம் ஆண்டு ஆயுள்தடணனையுடன்  மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த குற்றத்துக்காக அவர் சுமார் 36 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கியது. டென்னிசி மாகாணத்தில் மரண தண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றுவது நடைமுறை. ஆனால், மில்லர் தனது கடைசி ஆசையாக விஷ ஊசி வேண்டாம் தன்னை மின்சார நாற்காலியில் உட்கார வைத்து மின்சாரம் பாய்ச்சி கொன்று விடுங்கள் என்று சிறைத்துறையிடம் கோரினார்.

விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என்பதால், மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த டென்னி மாகான சிறைத்துறை அதை ஏற்று தலைநகர் நாஸ்வில்லேவில் உள்ள சிறைச்சாலையில் டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மில்லரின்  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.