ங்கோன்

மியான்மர் நாட்டில் ராணுவத்தை எதிர்த்தும் தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரியும் பல்லாயிரக்கணக்கானோர் இரண்டாம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தார்.  ஆனால் அங்கு ராணுவப் புரட்சி வெடித்தது.   ராணுவத்தினர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  ஒரு வருடத்துக்கு நாட்டில் அவசரநிலை  பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.   இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

[youtube https://www.youtube.com/watch?v=GsMtw5IrGks]

மியான்மர் நாடு முதலில் பர்மா என அழைக்கப்பட்டபோது ரங்கூன் தலைநகராக இருந்தது.  அந்நாட்டுக்கு மியான்மர் எனப் பெயர் மாற்றப்பட்ட போது தலைநகரின்  பெயரும் யங்கோன் என மாற்றப்பட்டது.   நாட்டின் இரண்டாவது  பெரிய நகரான யாங்கோனுக்கு பதிலாக புதிய தலைநகராக  நேபிடாவ் அமைக்கப்பட்டது.

யாங்கோன் நகரில் ராணுவத்தினரை எதிர்த்தும் ஆங் சான் சூகியின் விடுதலையைக் கோரியும் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  பொதுவாக இந்த போராட்டம் அமைதியாக நடந்ததாக சொல்லப்பட்டாலும் ஒரு சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதில் ஒரு சிலர் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் சரியான விவரம் இன்னும் தெரியவில்லை.

[youtube https://www.youtube.com/watch?v=lRQsTmXMNUo]

நேற்று ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து அவரை வரவேற்கப் பலர் கூட்டம் கூடி உள்ளனர்.  ஆனால் அவர் விடுதலை ஆகவில்லை என அவருடைய வழக்கறிஞர் அளித்த தகவலையொட்டி இந்த போராட்டம் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.   கடந்த திங்கள் அன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சூகி மற்றும் உள்ளோர் இதுவரை விடுதலை செய்யப்படாததால் போராட்டம் மேலும் வலுவடையலாம்  எனக் கூறப்படுகிறது..