யுக்ரேனிய போர்க்கப்பலை கைப்பற்றியது ரஷ்யா: உச்சகட்ட பதட்டம்

யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஷ்யா கைப்பற்றியுள்ளதை அடுதுத இரு நாடுகளுக்கிடையே உச்சகட்ட பதட்டம் நிலவுகிறது. மேலும் யுக்ரேன் தலைநகர் கீவில் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே  யுக்ரேன் நாட்டினர் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிரிமியா  பகுதியில் நிலை கொண்டிருந்த  யுக்ரேன் நாட்டுக்குச் சொந்தமான  மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியது. இத்தாக்குதலில் யுக்ரேன் கடற்படை கப்பல்களில் இருந்த கடற்படையினர் பலர்  காயமடைந்தனர்.

முன்னதாக தனது கடல் எல்லைக்குள் யுக்ரேன் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்துவிட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் தனது எல்லையிலேயே கப்பல்கள் நிற்பதாக யுக்ரேன் கூறியது.

இந்த நிலையில்தான் யுக்ரேன் போர்க்கப்பல்களை ரஷ்யா தாக்கி கைப்பற்றியுள்ளது. யுக்ரேனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ரஷ்யாவின் நடவடிக்கை  பைத்தியகாரத்தனமானது என்று காட்டமாக விமர்சத்துள்ளார். .

இந்த விவகாரம் குறித்து  இன்று (திங்கள்கிழமை) 4 மணிக்கு (ஜிஎம்டி நேரம் ) ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டுமென ரஷ்யா கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த விவகாரத்தால் ரஷ்யா – உக்ரேன் இடையே போர் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக மேற்கத்திய அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.