தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை – உத்தேச தேதிகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான உத்தேச தேதி விபரங்கள் வெளியாகியுள்ளன.

பின்னாட்களில் இவற்றில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச தேதி விபரங்கள்

* பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப           பதிவுக்கான அறிவிப்பு தேதி – 22.04.2019

* விண்ணப்பித்தல் தொடங்கும் நாள் – 02.05.2019

* ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி – 31.05.2019

* ரேண்டம் எண் ஒதுக்குதல் – 03.06.2019

* சான்றிதழ் சரிபார்ப்பு – 06.06.2019 முதல் 11.06.2019

* ரேங்க் பட்டியல் வெளியீடு – 17.06.2019

* கவுன்சிலிங் நடைபெறல்
(மாற்றுத் திறனாளிகள்) – 20.06.2019

* கவுன்சிலிங் நடைபெறல்
(முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள்) – 21.06.2019

* கவுன்சிலிங் நடைபெறல்
(விளையாட்டு ஒதுக்கீடு) – 22.06.2019

* பொது கவுன்சிலிங் (அகடமிக் – ஆன்லைன்) மற்றும்
(தொழிற்பிரிவு – நேருக்கு நேர்) – 03.07.2019 முதல் 28.07.2019 வரை