சிங்கப்பூரிலிருந்து இந்திய நகரங்களுக்கான விமானங்கள் – உத்தேசப் பட்டியல் வெளியீடு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து பல்வேறு தமிழக நகரங்களுக்கும், இதர இந்திய நகரங்களுக்கும் புறப்படும் விமானங்கள் குறித்த விபரங்களை, சிங்கப்பூரிலுள்ள இந்திய ஹை கமிஷன் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலின்படி, விமானப் பயணங்கள் ஜுன் 9ம் தேதியிலிருந்து துவங்குகின்றன. ஆனால், இது உத்தேசப் பட்டியல்தான் எனவும், இதில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விமானப் பயணங்களுக்கான கட்டண விபரங்கள், டிக்கெட் எடுப்பது தொடர்பான கட்டண விபரங்கள் தனியாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான மற்றும் தொடர் விபரங்களுக்கு, இணையதளத்தைப் பார்வையிடுமாறு கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, அதிக இடங்களுக்கான அதிகமான விமானப் போக்குவரத்து விபரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள விபரப் பட்டியல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.