ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் வருத்தம்

ண்டன்

சென்ற நூற்றாண்டில் நடந்த கொடூர செயலான ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கடும் அடக்குமுறை நிலவியது. கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்னும் மைதானத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துக் கொண்ட ஒரு கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்துக் கொண்டனர். மிகவும் பெரிய மதில் சுவர்களுடன் உள்ள இந்த மைதானத்தில் ஒரு குறுகலான வழி மட்டுமே உண்டு.

திடீரென அங்கு வந்த பிரிட்டன் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்பவன் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான். 10 நிமிடம் நடந்த இந்த சூட்டில் பலர் மரணம் அடைந்தனர். உலகெங்கும் பரபரப்பை உண்டாக்கிய இந்த சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மற்றும் பிரதமர் தெரசா மே ஆகியோர் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

வரும் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்து நூறாண்டுகள் முடிவடைய உள்ளது. அதை ஒட்டி இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே அந்நாட்டு பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அவர், “ஜாலியன் வாலா பாக் படுகொலை குறித்து நாங்கள் வருத்தம் அடைந்துள்ள்ளோம். இதனால் பாதிக்கப் பட்டோருக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்” என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.