ரான்சம்வேர்’ இணைய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடையே  விழிப்புணர்வு தேவை என பிரபல கணினி இயக்க மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரிய சைபர் தாக்குதல் கடந்த வாரம்  நடை பெற்றது. இந்த எதிர்பாராத தாக்குதலில்வ 150 நாடுகளை தாக்கிய ஒரு இணைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான  உலக நாடுகளின் அரசாங்கங்கள் பாதிப்புக்குள்ளாகின. அரசின் பாதுகாப்பு ஆவனங்களும் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

இதுகுறித்து, உலக நாடுகள் விழிப்புணர் கொள்ள வேண்டும் என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இணைய தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் தலைவர் மற்றும் பிரதான சட்ட அதிகாரி பிராட் ஸ்மித் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலில்வ  99 நாடுகளை சேர்ந்த சுமார் 75,000 கணினிகளில்  ஊடுருவியுள்ளதாகவுஙம்,

இந்த ரான்சம்வேர் இணைய தாக்குதலில்வ ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த இணைய தாக்குதல் WannaCry போன்ற பல பெயர்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீய மென்பொருளின் பரவல் ஓரளவு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்று தோன்றினாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்று கூறி உள்ளது.

இந்த ரான்சம்வேர்  இணைய தாக்குதல் காரணமாக,  கணினி அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும்,  இந்த தாக்குதல் குறித்து “விக்கிலீக்ஸில் சிஐஏ போன்றவை சுட்டிக்காட்டியிருக்கும் பாதிப்புகளை தற்போது நாம் கண்டிருக்கிறோம் என்றார்.

மேலும், இந்த இணைய தாக்குதல்,  கம்ப்யூட்டர் புராஜெக்ட், அரசாங்கங்களால் ஒதுக்கப்பட்ட மென்பொருட்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ரான்சம்பவர் இணைய தாக்குதலை தடுக்கவும், திருடப்பட்ட டேட்டோக்களை மீட்டெடுக்கவும்ப ல நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன.

இந்த புதிய வைரஸை, தங்களது நிறுவன  நிபுணர்களைக் கொண்டு தடுத்து வருவதாகவும், அதற்காக  $ 300 (£ 230) செலுத்துமாறு கோரிஉள்ளது.

இந்த இணைய தாக்குதல் காரணமாக 200,000 க்கும் மேற்பட்ட கணினிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த இணைய தாக்குதலில் குறித்து  தென் கொரியாவில் ஒன்பது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சகம், இதுகுறித்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதுவரை மூன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனங்களை மூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை உள்பட உலகில் உள்ள பிற நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் நடந்துள்ளதாக யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க கடுமையான சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் என்று யூரோபோல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த இணைய தாக்குதலில்  ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இணைய வழி தாக்குதல்களை விசாரிக்கும் இ சி 3 எனப்படும் தனது குழு பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருவதாகவும், அச்சுறுத்தலை குறைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முயன்று வருவதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.

உலகளாவிய இணையதாக்குதலில் பல அரசு அமைப்புகள் முடங்கின

பிரிட்டனில் மட்டும் மொத்தமாக 48 தேசிய சுகாதார சேவைகள் நேற்று நடைபெற்ற இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் 6 -ஐ தவிர மற்றவை இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் ஆம்பெர் ரட் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள ரான்சம்வேர் இணைய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர் தேவை என்றும் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.