பீதியடைந்த மக்கள்: கடல்நீரை உறிஞ்சி எடுத்த சுழற்காற்று!

இத்தாலி கடற்கரையில் உருவான சூழற்காற்று கடல்நீரை உறிஞ்சி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலி நாட்டின் தென்மேற்கு நகரான சலெர்னோ கடற்பகுதியில் இருநாட்களுக்கு முன்பு சுழற்காற்று உருவானது. இரவு 7.30 மணியளவில் உருவான சுழற்காற்று மெல்ல நகர்ந்து துறைமுகத்தை அடைந்து அங்கிருந்த கண்டெய்னர்களை வீசி எறிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

waterspout

சுழற்காற்று வானளவிற்கு உயர்ந்து சென்றுக் கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி வாசிகள் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பரவி வரும் வீடியோவில், “ ஆக்ரோஷமாக வரும் சுழற்காற்று கடல் நீரை அப்படியே உறிஞ்சி எடுப்பது போன்று காட்சி அளிக்கிறது “.

இதனை பார்த்த மக்கள் நம்ப முடியாத அதிசம் நிகழ்ந்துள்ளதாகவும், காற்று கடல்நீரை உறிஞ்சி செல்கிறது என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த அதிசயம் குறித்து விளக்கிய அறிஞர்கள் “கடலின் மேற்பகுதியில் இருக்கும் வறட்சியை பூர்த்தி செய்வதற்காக உடனடியாக மேலெழும் காற்றால் இதுபோன்ற சுழற்காற்று ஏற்படுகிறது ” என தெரிவித்தனர்.