பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பயன்படுத்துவது இந்தியாவில் அதிகரிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

டில்லி:

லகம் முழுவதும் பயங்கரவாதிகள் தங்களின் தாக்குதல்களுக்காக குழந்தைகளை பயன்படுத்தி வருவது அதிகரித்து உள்ளது. இந்தியாவில் நக்சலைட்டுகள் குழந்தைகளை தங்களின் பயங்கரவாதத்திற்குதயார் படுத்தி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. சபை தெரிவித்து உள்ளார்.

ஐ.நா., பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நக்சல்கள் குழுவில் உள்ள சிறுவர்கள்

ஆயுத மோதலில் குழந்தைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,  இந்தியா, சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், பிலிப்பைன்ஸ், நைஜீரியா உள்ளிட்ட 20 நாடுகளில் பயங்கரவாதிகள், நக்சலைட்டுக் க் தங்களின்  தாக்குதலுக்காக குழந்தைகளை தயார்படுத்தி தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் குறிப்பாக,  ஜார்க்கண்ட் மாநிலத்தில் குலுக்கல் முறையில் குழந்தைகளை நக்சலைட்கள் தேர்வு செய்து வருவதாகவும், இந்த குழந்தைகள் 16 வயதை எட்டியும் அவர்களை நக்சலைட்டுக்கள் வந்து அழைத்துச் சென்று விடுவதாகவும், வர மறுக்கும் குழந்தைகளை தூக்கிச்சென்று விடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது. சமீப காலமாக இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.  ஆனால், இதுவரை நக்சலைட்டுகள், மாவோயிட்டுகள் குழுக்கலில் எத்தனை குழந்தை கள் உள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஆர்பிஎப் அதிகாரிகள், இந்த யுக்தி புதியது அல்ல. ஏற்கனவே பல ஆண்டு களாக நக்சல்கள்   இந்த நடைமுறைகளை  கடைபிடித்து வருவதாகவும், வீட்டுக்கு ஒருவர் தங்களது குழந்தை களை நக்சலைட்டுகள் இயக்கத்தற்கு தர வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் ராணுவத்தினருக்கு எதிராக கல்லெறியும் சிறுவர்கள்

ஏற்கனவே எல்டிடிஇ முதன்முதலாக இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரின்போத   சிறுவர்களை பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிறுவர்களையும், பெண்களையும் ராணுவத்திற்கு எதிதைக  களமிறக்கி உள்ள நிலையில், மாவோயிஸ்டுகளும் குழந்தைகளை அரசுக்கு எதிராக ஆயுத போரில் இறக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.