இந்தோனேசியா: 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்! 4 பேர் பலி!

ன்று காலை இந்தோனேசியாவில் உள்ள 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற பகுதியில் உள்ள மூன்று முக்கிய சர்ச்சுகளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடான இந்தோனேசியாவில்  இந்த பகுதியில்தான் அதிக சர்ச்சுகள் உள்ளன.

இன்று காலை உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக வந்த பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். மூன்று சர்ச்சுக்குள்ளும்  வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளன. இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி ஆகியுள்ளார்.   16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தீவிரவாத தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற சர்ச்சுகளில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.