பயங்கரவாத தாக்குதல்: மதபோதகருக்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பு

இந்தோனேசியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட மதகுருவிற்கு மரண தண்டனை அளித்து ஜகார்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் மதபோதகர் அமன் அப்துர் ரஹ்மான் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பொதுமக்கள் இறந்தனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை ஜகார்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக அமன் அப்துர் ரஹ்மான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நீதிமன்ற வளாகத்தில் அதிகளாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
aman
விசாரணையை தொடர்ந்து ” 2016ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தக்குதலில் அமன் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த குற்றவியல் நடவடிக்கை பயங்கரவாதத்தை தூண்டுகிறது” என்றும் நீதிபதி அஹ்மது ஜைனி கூறினார். அதன்பிறகு குற்றவாளியான அமன் அப்துர் ரஹ்மானிற்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அப்போது நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த பயங்கரவாதிகளின் தலைவன் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாட்டில் துப்பாக்கி சூடு நடத்தியதற்காக இந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிபதி கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் தலைநகரில் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். அதன்பிறகு தீவிரவாதிகள் போலீசாருடன் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தகைய குற்றத்திற்கு காரணமான அமன் அப்துர் ரஹ்மானிற்கு மரண அளிக்க வேண்டுமென கடந்த மாதம் அரசு வழக்கறிஞர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 2002ம் ஆண்டு பாலி தீவில் நடந்த குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாக இருந்தனர். இது இந்தோனேசியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று கூறப்படுகிறது.

அனைத்து ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கும் அமன் தலைவராக இருந்ததாக கருதப்படுகிறது. உள்ளூர் தீவிரவாத வளைத்தலமான ஜமா அன்ஷரத் தவ்லாவின் தலைவராக அமன் இருந்துள்ளார். இந்த தீவிரவாத வலைதளம் இந்தோனேசியாவில் நடைபெற்ற தாக்குதலுக்கும், சுராபயா பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரண்டு குடும்பங்கள் தேவாலயம் மற்றும் காவல்நிலையம் அருகில் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் 9மற்றும் 12வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஏற்கனவே அமன் அப்துர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு சிறையில் இருந்தபடி அமன் அப்துர் ரஹ்மான் ஐ.எஸ். அமைப்பில் சேர போராளிகளை நியமித்தார். ஜிகாதி குழுவின் தலைவருகளுடன் அமன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதத்தில் பிரச்சாரத்தின் போது மொழிப்பெயர்ப்பாளராகவும் அமன் இருந்துள்ளார் என்று அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.