பயங்கரவாத தாக்குதல்? விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

டில்லி,

நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் புத்தாண்டை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக மக்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிகையை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து,  நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கு வருவோரை முறையாக சோதனை செய்யவும்,  சந்தேகத்துக்குரிய நபர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பைகள் என அனைத்துமே சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.