பயங்கரவாதி என் மகனாக இருக்க முடியாது!: உடலை வாங்க “இந்திய”அப்பா மறுப்பு!

லக்னோ,

க்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இளைஞரின் உடலை வாங்க அவரது தந்தை மறுத்து உள்ளார். அந்த இளைஞர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட்டதால், அவரது உடலை வாங்க முடியாது மறுத்து விட்டார்.

போபால் – உஜ்ஜைன் ரயில் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்களை பாதுகாப்பு படை யினர் தேடி வந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் கொடுத்த தகவலையடுத்து சபியுல்லாவை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில்,  கான்பூர் மாவட்டம் ஜாஜாமவு டிலா கிராமத்தைச் சேர்ந்த சஃபிபுல்லா என்ற ஐஎஸ் இயக்க  இளைஞருக்கு  இந்த ரெயில் குண்டுவெடிப்பில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவரை பிடிக்க சென்ற போலீசாரை எதிர்த்து சபியுல்லா துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார். இதைத்தொடர்ந்து போலீசாரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் காரணமாக, இறுதியில் சபியுல்லா சுட்டுக்கொல்லப்பட்டடார். அவர் ஐஎஸ் இயக்க பயங்கரவாதி என்பது விசாரணையில் தெரியவந்தது.

சபியுல்லா ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது அவரது பெற்றோருக்கு தெரியாது. அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு வெளியான தகவல்களை தொடர்ந்தே அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதையடுத்து, துப்பாக்கி சூட்டில் இறந்த சபியுல்லாவின் உடலை வாங்க மறுத்துவிட்டார் அவரது தந்தை சர்தாஜ்.

அவர் கூறியதாவது,

தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவன் தமது மகனாக இருக்க முடியாது என்றும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் அவமானம் தேடித் தந்த சஃபிபுல்லாவின் உடலை வாங்க முடியாது, தமது மூதாதையர்கள் அனைவரும் இந்திய மண்ணில் பிறந்ததாகவும், அனைவரும் இந்தியர்கள் தான் என்றும்  சர்தாஜ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.