பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் கட்சி அலுவலகம் திறப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சி அலுவலகத்தை திறந்தார்.

பாகிஸ்தான் அரசியலில் குளறுபடி ஏற்பட்ட போது வீட்டுக்காவலில் இருந்த ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கினான். அமெரிக்கா, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவன் பாகிஸ்தானில் அரசியல் கட்சியை தொடங்கியது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தை மில்லி முஸ்லீம் லீக் பாகிஸ்தான் என அரசியல் கட்சியாக்கி உள்ளான். பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு அமைப்பு உதவியாக உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சி அலுவலகம் திறந்து உள்ளான் என செய்தி வெளியாகி உள்ளது.