தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: செங்கோட்டைக்கு பலத்த பாதுகாப்பு!

டில்லி,

யங்கரவாதிகள் இந்தியாவின் முக்கியமான இடங்களை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலை அடுத்து டெல்லி செங்கோட்டைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அதிரடிப்படையை சேர்ந்த 90 வீரர்கள் டெல்லி செங்ககோட்டை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

red-fort

தலைநகர் டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 90 வீரர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொகாலய மன்னர்களின் இருப்பிடமாக இருந்து வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றுவது வழக்கம். ஏற்கனவே நாடாளுமன்றத்தை தாக்க திட்டமிடப்பட்டதையடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெரும்பாலான விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி