பாகிஸ்தான் ஆதரவால் தீவிரவாதிகள் சுதந்திர நடமாட்டம் : நிர்மலா சீதாராமன்

பாரிஸ்

தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதால் சுதந்திரமாக நடமாடுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அத்த்டன் இரு நாடுகள் இணைந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வது குறித்த்ம் அவர் விவாதித்துள்ளார்.

அதன் பிறகு பாரிஸ் ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடந்த நிகழ்வில் நிர்மலா சீதாராமன், “இந்தியா மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது இந்தியாவின் பொறுமைய சோதிக்கிறது. தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ஆதரவால் சுத்ந்திரமாக நடமாடுவதுடன் தங்கள் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திவிரவாத நடவடிக்கைகளால் இந்தியாவும் பிரான்ஸும் கடுமையாக பாதிப்பு அடைந்துளது. இவ்வாறு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பிரான்ஸ் அரசு தீவிரவாத அச்சுறுத்தலை மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறது” என உரையாற்றினார்.