டில்லியில் பயங்கரவாதிகள் கைது! தாக்குதல் திட்டம் முறியடிப்பு

டில்லி,

நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லி, மும்பை போன்ற நகரங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களின் கைது  காரணமாக அவர்களின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டி ருப்பதாக வந்த உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து  நாடு முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து  டில்லி,  மும்பை,  உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது ஜலந்தர், பிஜ்னோர் பகுதிகளில் இருந்து 10 பயங்கரவாதிகளும், மும்பையை அடுத்த தானே பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளையும்  போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.