ராணுவப் பயிற்சி முகாமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!


ஜம்மு:

ம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியல்  துணை ராணுவப் படை பயிற்சி முகாம் உள்ளது. இதன் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் சிலர் கல்வீசி தாக்கினர். .

பிறகு  துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அதிகாலை 2.10 மணி அளவில் நடத்துள்ளது. இத் தாக்கதலில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.