பஞ்சாப் சிறையை உடைத்து புகுந்த தீவிரவாதிகள்! காலிஸ்தான் தீவிரவாத தலைவரை மீட்டுச் சென்றனர்!

சண்டிகர்:

ஞ்சாப் மாநிலம், நாபா சிறையில் காலிஸ்தான் விடுதலைப்படைத் தலைவர் ஹர்மிந்தர்சிங் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ஆயுதங்களுடன் வந்த பத்து தீவிரவாதிகள் சிறையை உடைத்து தகர்த்தெறிந்து,   ஹர்மிந்தர்சிங்கை சிறையிலிருந்து மீட்டுச் சென்றனர்.

oo

இவருடன் மேலும் நான்கு தீவிரவாதிகள் சிறையிலிருந்து தப்பினர்.

சிறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் காவல்துறையினர் போல உடையணிந்து சிறைக்குள் நுழைந்தனர்.

இந்தசம்பவத்தை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து  செக் போஸ்ட்டுகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பேருந்து மற்றும் ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.