அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

னந்தநாக், ஜம்மு காஷ்மீர்

ன்று முதல் துவங்க இருக்கும் அமர்நாத் யாத்திரையில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரை இன்று முதல் துவங்குகிறது.   இதில் பாதுகாப்புக்காக 35000 முதல் 40000 வரை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் காவல்துறை, ராணுவம், எல்லைக்காவல் துறை, மத்திய பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.   இன்று துவங்கும் இந்த யாத்திரை 48 நாட்களில் முடிவு பெறும்.   இது கிட்டத்தட்ட தென் இந்தியாவின் சபரிமலை யாத்திரை போல 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் விழா ஆகும்.

இந்த யாத்திரை பாதையில் தீவிரவாதக் கலவரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்களையும்,  காவலர்களையும் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.  அந்தத் தகவல் ஒரு கடிதம் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்துக் காவல் அதிகாரிகளுக்கும், மாநில காவல் துறை தலைவர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் எப்படியோ வெளியே வந்து அனைத்து மீடியாக்களிலும் வைரலாகப் பரவியுள்ளது.   இந்த வருடம் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகவே என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அதிகாரிகள் தரப்பில் இது வழக்கமான பாதுகாப்புதான் என்றும் அப்படி மிரட்டல் ஏதும் கிடையாது என  சொல்லப்படுகிறது